அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

360 டிகிரியில் இயற்கையை ரசிக்கலாம்; மதுரை – குருவாயூர் ரயிலில் இன்று முதல் விஸ்டாடோம் பெட்டி!

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே ரயில் பயணம், தலைக்கு மேலே நீல வானம், ஜன்னலுக்கு வெளியே பசுமை போர்த்திய மலைத்தொடர்கள், தொலைவில் தெரியும் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், இவற்றையெல்லாம் ரசித்தபடியே பயணம் செய்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் இதன் நினைவுகள் என்றைக்கும் மனதளவில் நீங்கா அனுபவத்தைக் கொடுக்கும் அல்லவா? இந்த அனுபவத்தை நீங்கள் உங்களது பயணத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே பயணத்தை அழகான அனுபவமாக மாற்றும் ஓர் ரயில் பயணம் இன்று முதல் தமிழகத்தில் முதல் முறையாக கண்ணாடிக்கூரை கொண்ட விஸ்டாடோம் பெட்டி கொண்ட ரயில் சேவை சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதன் சிறப்பு என்ன? எந்தெந்த நாட்களில் இயக்கப்படுகிறது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..

தமிழ்நாட்டில் முதல் விஸ்டாடோம் ரயில் சேவை:

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பெட்டிகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரயில் சேவைகளில் பயணிகளுக்கு இயற்கையை நெருக்கமாக ரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. அந்த வகையில், மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் இந்தப் பெட்டி அறிமுகமாவது தெற்கு ரயில்வே பயணிகளுக்குப் புதிய அனுபவமாக அமைய உள்ளது.

சிறப்பம்சங்கள்:

கண்ணாடி ஜன்னல்களின் வழியாக இயற்கையை ரசித்தப்படி பயணம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், விஸ்டாடோம் பெட்டியின் மற்றொரு முக்கிய அம்சம், 360 டிகிரியில் சுழலும் இருக்கைகள் தான். ரயிலில் பயணிக்கும் போது, பயணிகள் தங்களுக்குப் பிடித்த திசைகளில் இருக்கைகளைத் திருப்பி சுற்றியுள்ள இயற்கையை ரசிக்கலாம். பசுமை போர்த்திய மேற்குத்தொடர்ச்சி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், சில்லென்ற சாரல் மழை, மாறி மாறி வரக்கூடிய வானிலை மாற்றங்கள் என எதையும் தவறவிடாமல் ரசிக்க இந்த வசதிகள் உதவுகிறது. குறிப்பாக, குழந்தைகளுடன் பயணம் செய்யும் குடும்பங்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சுமார் ரூ.4 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியில் மொத்தம் 44 இருக்கைகள் மட்டுமே உள்ளன. வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

எந்தெந்த நாட்களில் பயணம் செய்யலாம்?

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் (16327) விஸ்டாடோம் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் சோதனை அடிப்படையில் இணைக்கப்பட உள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் ரயிலில்: அக்டோபர் 22 முதல் ஜனவரி 15 வரை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து புறப்படும் ரயிலில்: அக்டோபர் 23 முதல் ஜனவரி 16 வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் வித்தியாசமான ரயில் பயணத்தைத் திட்டமிடுபவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், பயணத்துக்கு முன்பாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அட்டவணையில் பெட்டி இணைப்பு மற்றும் இருக்கை வசதியை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே கட்டணம்?

விஸ்டாடோம் பெட்டியில் பயணம் செய்வதற்கான அடிப்படைக் கட்டணம் ரூ.515 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து குருவாயூர் வரை முழுமையாகப் பயணம் செய்வதற்கான மொத்தக் கட்டணம் ரூ.1,875 ஆகும். உங்களது குழந்தைகளோடு இயற்கையை ரசித்தப்படி பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவறாமல் இந்த பயணத்தை ஒருமுறையாவது அனுபவிக்க மறந்துவிடாதீர்கள்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V