அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கைக்கு கடும் வானிலை சிவப்பு எச்சரிக்கை – மண்சரிவு, வெள்ளம் ஏற்படும் அபாயம்

இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்ப நிலைமை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டீஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்வாறு நாட்டை அண்மித்து வடமேல் திசையில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்ப நிலைமையானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த வளிமண்டல குழப்ப நிலைமையினால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் வங்காள விரிகுடா பகுதியை அண்மித்து நாளைய தினம் வலுவான தாழமுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுமானால், இந்த நிலைமையானது மேலும் வலுவடையும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய நாள் முழுவதும் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.

மண்சரிவு அபாயம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால், மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய சுமார் 30,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கின்றார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் சாத்தியங்கள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சில இடங்களில் கற் பாறைகள் மற்றும் மண் மேடுகள் தற்காலிகமாக தரித்து நிற்கின்ற நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மழையுனான வானிலையினால் அவை சரியும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கி;ன்றார்.

குறித்த பகுதிகளில் சிறியளவிலான மழை வீழ்ச்சி பதிவாகினாலும், கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனால், இவ்வாறான அபாயம் மிக்க பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு அபாயம்

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், சில ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வெள்ள அபாய நிலைமையை அண்மித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கு அபாயத்தை அண்மித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

தெதுறுஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால, செக்கனுக்கு 16,500 கனஅடி நீர் வெளியேறி வருவதாகவும் திணைக்களம் கூறுகின்றது.

இதனால், தெதுறுஓயாவை அண்மித்துள்ள வாரியபொல, நிகவரெட்டிய, மஹவ, கொபேய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராய்ச்சிகட்டு மற்றும் ரச்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கலாஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் கலாஓயாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதனால், ராஜாங்கனை, நொச்சியாகம, வணாத்துவில்லு மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக திணைக்களம் எச்சரிக்கை விடுக்கின்றது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால், 13,200 கனஅடி நீர் வெளியேறிவருவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதனால், தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளமையினால், மக்களை அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh