அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கை நீதிமன்ற சாட்சி கூண்டில் தமது கழுத்தை அறுத்துக்கொண்ட சந்தேகநபர்கள்

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மூன்று சந்தேகநபர்கள், சாட்சி கூண்டில் வைத்து, தமது கழுத்தை தாமே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்தில் மூன்று பேரும் காயமடைந்த நிலையில், திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கழுத்து வெட்டிக் கொண்ட மூவரில், ஒருவரின் வெட்டுக் காயம் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

ஏனைய இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்தது என்ன?

திருகோணமலை – நிலாவெளி பகுதியில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 சந்தேகநபர்களை திருகோணமலை தலைமையக போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் போலீஸார், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, 5 சந்தேகநபர்களும் நீதவான் முன்னிலையில் விசாரணைகளுக்காக சாட்சி கூண்டில் ஏறியதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இவர்களில் மூவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கூரிய பொருள் ஒன்றினால் தமது கழுத்தை நீதவான் முன்னிலையிலேயே சாட்சி கூண்டில் வைத்து அறுத்துக்கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் கழுத்திலிருந்து இரத்தம் சீறிப் பாய்ந்த நிலையில், நீதிமன்றத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், ஒருவருக்கு மாத்திரம் கழுத்தில் ஆழமாக காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஆழமாக காயம் ஏற்பட்ட நபருக்கு, அதிகளவில் இரத்தம் வெளியேறிய நிலையில், அவர் நீதிமன்றத்திலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்த போலீஸார், பாதிக்கப்பட்டவர்களை நீதவானின் அனுமதியுடன் உடனடியாக திருகோணமலை மருத்துமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உடன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில். தற்போது அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த சந்தேகநபர்களை சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதவான் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh