அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களிலிருந்த 40 மாலுமிகளை காப்பாற்றி இரானுக்கு அனுப்பிய இலங்கை

இலங்கையை அண்மித்த சர்வதேச கடலில் நங்கூரமிட்டுள்ள இரான் நாட்டிற்கு சொந்தமான கப்பல்களில் கடமையாற்றிய 40 பேர், சிகிச்சைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

அவசர மருத்துவ உதவி நிலைமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, இந்த குழுவினர் காலி துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார றோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையை அண்மித்துள்ள சர்வதேச கடல் பரப்பில், இரானுக்கு சொந்தமான சரக்கு கப்பல்கள் உள்ளிட்ட சுமார் 20 கப்பல்கள் கடந்த ஜுலை மாதம் முதல் நங்கூரமிட்டுள்ளன.

இலங்கையிலுள்ள இரான் தூதரகத்தின் தலையீட்டிலேயே இந்த குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 40 இரானிய பிரஜைகளுக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இரானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார.

இந்த அனைவரும் ஒரே கப்பலில் கடமையாற்றியவர்கள் கிடையாது எனவும், வெவ்வேறு கப்பல்களில் கடமையாற்றியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களே இவ்வாறு இலங்கையை அண்மித்த சர்வதேச கடலில் கடந்த சில மாதங்களாக நங்கூரமிட்டுள்ளன.

இவ்வாறு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்டுள்ள கப்பல்கள் இலங்கைக்குள் வருகைத் தருவதற்கு அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதியை வழங்கக்கூடாது என அமெரிக்க தூதரகம் அண்மையில் இலங்கையிடம் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கையை அண்மித்து சுமார் 20 இரான் கப்பல்கள் நிர்கதியில் – உதவினால் இலங்கைக்கு தடை என அமெரிக்கா எச்சரிக்கை

எனினும், இலங்கைக்கு அவ்வாறான எந்தவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில், அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களில் கடமையாற்றியவர்களுக்கு இலங்கை உதவியுள்ளமையின் ஊடாக இலங்கைக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடுமா என வெளிவிவகார அமைச்சிடம் வினவப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சர்வதேச சட்டத்திற்கு அமைய, மனிதாபிமான காரணங்களினால் அவசர மருத்துவ நிலையின் கீழ் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எந்தவொரு நாடும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh