அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அண்ணன் சீர் திட்டம் தொடக்கம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை; ரூ.812 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்துக்கான அரசாணை 2026 அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டள்ளது. 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது. பெண்களின் திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் அரசு ஒரு அண்ணனைப் போல துணை நிற்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

யாருக்கு கிடைக்கும்?

ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் தகுதியான குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். திருமணம் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் ரூ.5 லட்சம் வரையிலான குடும்ப வருமானம் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பம் :

பயனாளிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக தனி இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி சரிபார்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும்.

தங்கம் கொள்முதல் நடைமுறை:

தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தங்கத்தின் விலை, இந்திய புல்லியன் மற்றும் நகைச் சங்கம் (IBJA) வெளியிடும் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாக அரசு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அண்ணன் சீர் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sneha Venkatachalam

Sneha Venkatachalam