அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

டெல்லி: போராட்டத்தில் 3 பெண் செய்தியாளர்களுக்கு பாலியல் தொல்லை புகார்; குற்றப்பிரிவுக்கு மாற்றிய போலீஸ்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்கச் சென்ற மூன்று பெண் செய்தியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் புகார்கள் டெல்லி போலீஸ் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, நியாயமான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 3-ம் தேதி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், தேர்தல் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் AISA தலைவர் நேஹா போரா, சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகார் அளித்த செய்தியாளர்களில் ஒருவர், பெண் போராட்டக்காரர்களை ஆண் போலீசார் கைது செய்தபோது அங்கு பெண் போலீசார் இல்லை என கேள்வி எழுப்பியதாகவும், அதன்பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி தன்னை தகாத முறையில் தொட்டு தள்ளியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மற்றொரு வீடியோ செய்தியாயாளர், போராட்டத்தை பதிவு செய்துகொண்டிருந்தபோது போலீஸ் அதிகாரி ஒருவர் தகாத முறையில் உடல் ரீதியாக நெருங்கியதாக புகார் அளித்துள்ளார். மற்றொரு செய்தியாளரும் போலீஸ் அதிகாரி மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புகார்களைப் பெற்ற டெல்லி போலீஸ், அவை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விசாரணையில் புகார்தாரர்களின் வாக்குமூலங்கள், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. பொதுமக்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களையும் குற்றப்பிரிவிடம் வழங்குமாறு போலீசார் கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், CJP செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், குற்றச்சாட்டுக்கு உள்ளான ACP விவேக் பகத் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுப்பதாக குற்றம்சாட்டினார். இதைக் கண்டித்து CJP உள்ளிட்டோர் பாராளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு Press Club of India அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் செய்தியாளர்கள் அச்சமின்றி தங்கள் பணியை மேற்கொள்ளவும், போராட்டங்களை செய்தியாக்கவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, தகுதியற்ற மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் இதுவரை சுமார் 13 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதேவேளை, இந்த நடவடிக்கை தகுதியான வாக்காளர்களை பாதிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்; தேர்தல் ஆணையமும் பாஜகவும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.

போராட்டங்களின்போது போலீசார் மக்களை இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மூன்று பெண் செய்தியாளர்களின் புகார்கள் மீதான விசாரணை தற்போது குற்றப்பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது. குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட உள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்