அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மகளிர் ஹாக்கி தங்கம் வென்ற இந்தியா சாதனை!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அக்டோபர் 2ஆம் தேதி இந்தியாவுக்கு பதக்க மழை பொழிந்தது. மகளிர் ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் வில்வித்தை உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றனர். இதனுடன் ரீகர்வ் வில்வித்தையில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், படகோட்டுதல் மற்றும் செபக்தக்ராவில் தலா ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்:

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வெற்றியே அன்றைய நாளின் முக்கிய சாதனையாக அமைந்தது. இறுதிப் போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

லால்ரெம்சியாமி அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த நிலையில், கோல் கீப்பர் சவிதா புனியா முக்கியமான பெனால்டி ஸ்ட்ரோக்கை தடுத்து அணியின் முன்னிலையை பாதுகாத்தார்.இதன் மூலம் 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு, 44 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மீண்டும் தங்கம் வென்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி நேரடி தகுதி பெற்றது.

குத்துச்சண்டையில் மூன்று தங்கங்கள்:

இந்திய குத்துச்சண்டை வீரர்களும் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்தனர்.

மகளிர் 75 கிலோ பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் ஸி-யி பாவோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். தனது 29ஆவது பிறந்தநாளில் இந்த வெற்றியைப் பதிவு செய்த லவ்லினா, தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கத்தை வென்றார்.

இதன் மூலம் எம்.சி.மேரி கோமுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மகளிர் 65 கிலோ பிரிவில் பர்வீன் ஹூடா, சீன தைபேயின் சென் நியென்-சின்னை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பர்வீன் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

ஆடவர் 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால், தென் கொரியாவின் கிம் மின்சியோங்கை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். மூன்று சுற்றுகளிலும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்த அங்குஷ், இந்தியாவின் குத்துச்சண்டை தங்க வேட்டையை நிறைவு செய்தார்.

பின்தங்கிய நிலையில் இருந்து தங்கம் வென்ற சுஜீத்:

மல்யுத்தத்தில் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் சுஜீத் கல்கல் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தார்.தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் குடியேவுக்கு எதிரான போட்டியில் 2-9 என்ற கணக்கில் பின்தங்கிய சுஜீத், தொடர்ந்து எட்டு புள்ளிகளைச் சேர்த்து போட்டியின் போக்கை மாற்றினார்.இறுதியில் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதற்கு முன் அரையிறுதியில் ஜப்பானின் ஒலிம்பிக் சாம்பியன் கோடாரோ கியூகாவை 3-3 என்ற நிலையில், விதிமுறை அடிப்படையில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

மகளிர் ரீகர்வ் அணிக்கு வரலாற்று தங்கம்:

வில்வித்தையிலும் இந்தியாவுக்கு முக்கியமான சாதனை கிடைத்தது.அங்கிதா பகத், கீர்த்தி சர்மா மற்றும் கும்கும் மொஹோட் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ரீகர்வ் அணி பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்றது.

கலப்பு ரீகர்வ் அணியில் கும்கும் மொஹோட் மற்றும் தீரஜ் பொம்மதேவரா வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆடவர் ரீகர்வ் அணி பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவுகான் மற்றும் யஷ்தீப் போகே ஆகியோரும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

படகோட்டுதல், செபக்தக்ராவில் வெண்கலம்:

படகோட்டுதல் மற்றும் செபக்தக்ராவிலும் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைத்தன.மகளிர் டிங்கி பிரிவில் நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆடவர் குவாட்ரன்ட் செபக்தக்ரா பிரிவில் இந்திய அணி அரையிறுதியில் ஜப்பானிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

பதக்கப் பட்டியலில் 5ஆவது இடம்:

அக்டோபர் 2ஆம் தேதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 76 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

44 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் ஹாக்கியில் கிடைத்த தங்கம், குத்துச்சண்டையில் மூன்று தங்கங்கள், சுஜீத்தின் அதிரடி மீள்வெற்றி மற்றும் மகளிர் ரீகர்வ் அணியின் வரலாற்று சாதனை என இந்தியாவுக்கு அக்டோபர் 2ஆம் தேதி பல முக்கிய வெற்றிகள் கிடைத்தன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sneha Venkatachalam

Sneha Venkatachalam