உலகப் பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மதுரை மாவட்ட மக்கள் மட்டுமில்லாது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் இருந்து மதுரைக்கு வந்து செல்லும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ரயில்வே சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன ரயில்கள்? எங்கிருந்து இயக்கப்படுகிறது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
சிறப்பு ரயில் சேவை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வருகின்ற செப்டம்பர் 17 ல் கும்பாபிஷேகம் என்பதால் அதற்கு முந்தைய நாள் மக்கள் மதுரையை நோக்கி கிளம்புவார்கள். இந்நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை சென்ட்ரலிருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி மதுரையில் இருந்து சென்ட்ரல் சென்டரலுக்கும் 06153 மற்றும் 06154 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலானது மாலை 4.10 மணிக்கு சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடையும்.. இதே போன்று கும்பாபிஷேகம் முடிந்தப்பின்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்டரல் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளுர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படவுள்ளது.
இதே போன்று செப்டம்பர் 16 அன்று காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மெமு ரயில் இரவு 10.30 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மேலும் தென் மாவட்ட பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு அதிகளவு சிறப்பு ரயிலும், சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து மதுரைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்டவுள்ளளன.