அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பெண்களுக்கு குட் நியூஸ்; நாளை முதல் விரிவாகும் இலவச பேருந்து சேவை! எந்தெந்த பேருந்துகள்? முழு விபரம்!

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் அன்றாட பயணச் செலவைக் குறைக்கும் வகையில் கடந்த திமுக அரசின் சார்பில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையானது தொடங்கப்பட்டது. இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன் வெற்றி பயணம் என்கிற பெயரில் கூடுதல் பேருந்துகளுடன் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை துவங்கவுள்ளது. குறிப்பாக எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் உள்ளிட்ட சேவைகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், சந்தை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காக பேருந்துகளைப் பயன்படுத்தும் பெண்களும் இந்த விரிவாக்கத்தின் மூலம் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இதுவரை குறிப்பிட்ட சில பேருந்துகளில் மட்டுமே கிடைத்து வந்த கட்டணமில்லா பயண வசதி, இனி கூடுதல் சேவைகளுக்கும் விரிவடைவதால் பெண்களின் அன்றாடப் பயணத்தில் இது முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை மூலம் அதிகமான பெண்கள் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

விரிவாக்கத்தில் எத்தனை பேருந்துகள்?

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 12,692 அரசுப் பேருந்துகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பேருந்து சேவையின் மூலம் தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் எனவும், பெண்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டு தினமும் 1,65,312 பேருந்து நடைகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V