அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த அரசு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாக யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சுவாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கோயில் யானைகள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் உரிய நடைமுறைகள் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போதே, அசாம் மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஹீராலால் மற்றும் ‘சிவா ஆகிய இரு இளம் ஆண் யானைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதே போல, மீனாட்சியம்மன் கோயிலுக்கு துர்கா என்ற யானையும், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு பிஜூலி என்ற பெண் யானையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் திருவிழாக்களில் கோயில் திருவிழாக்களில் யானைகளை அழைத்துச் செல்லும்போது அவற்றின் உடல்நிலை, பராமரிப்பு, போக்குவரத்து, ஓய்வு, உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும், அதிக நேரம் யானைகளை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவது, அதிக கூட்டம் உள்ள பகுதிகளில் அவற்றை அழைத்துச் செல்வது போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான நடைமுறைகளும் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற வாய்ப்புள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வரைவு நெறிமுறைகளில் யானைகளின் நலன், அவற்றை அழைத்துச் செல்லும் முறை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யானைகளுக்கு வழங்க வேண்டிய ஓய்வு மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V