தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் காப்பர் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இயக்கி வந்தது. ஆரம்பத்திலேயே சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டால் ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையோடு 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ல் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 1997 ஆம் ஆண்டே ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் பெண்கள் மயக்கம் அடைந்தாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு நடத்தியதையடுத்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாக இந்நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த சூழலில் தான் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுக்கழிவுகளால் உடலுக்கு பல கேடு விளைவிக்கிறது. இதனை முழுவதுமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்கள் நடந்தது. அப்போது போரட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் உயிரிழ்ந்த சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்காலிக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்கு எதிராக வழக்குகள் நடந்து வந்த நிலையில் ஆலையில் நிரந்தரமாக மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் வேறு வழியில் திறக்க வேதாந்த நிறுவனம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளிவருகிறது. எனவே இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது என தெரிவித்துள்ளார்.

இதோடு ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.ஆனாலும் இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்கி திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன் வைக்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் தன்னுடை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.