தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கூட அந்தளவிற்கு பரபரப்பாக இல்லை. எப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்ததோ? அன்றைய தினத்திலிருந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனித்து 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டப்படி, 118 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் குடியரசுத் தலைவரின் ஆட்சி தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிபிஎம், சிபிஐ, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் விஜய் பெற்றிருந்தார்.
தாங்கள் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று ஆளுநருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்ததையடுத்து கடந்த மே 10 ல் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. இருந்தப்போதும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் த.வெ.க விற்கு இருந்தது. அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி:
விஜய்க்கு ஆதரவு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 144
தமிழக வெற்றிக்கழகம் – 106
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
இந்திய கம்யூனிஸ்ட் – 2
விடுதலை சிறுத்தைக் கட்சி – 2
முஸ்லீம் லீக் – 2
அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி அணி – 25
எதிராக வாக்கெடுத்த எம்.எல்.ஏகள்:
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி – 22
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலையாக உள்ளனர். திமுக வைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.