தமிழகத்தில் சி.ஜோசப் விஜய்யை முதல் அமைச்சராக கொண்ட அமைச்சரவை மீது இந்த பேரவை நம்பிக்கையை தெரிவிக்கிறது எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என விஜய் தெரிவித்ததையடுத்து தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசிய பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
சிபிஎம்:
விஜய் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தாலும், மக்களுக்கு பாதமான திட்டங்களை எப்போது எதிர்ப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ செல்லச்சாமி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியில் ஆதரவு கொடுக்கிறோம் என சிபிஎம் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை வரவேற்கும் என்றும், அதே சமயம் மக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் சிபிஎம் எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்:
தமிழ்நாட்டில் குதிரைபேரம் நடந்ததாக கூறுவது மனவேதனை அளிக்கிறது எனவும், தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத விஷயம் எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரை சந்திக்க யார்? முகமூடி அணிந்து சென்றது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதோடு அரசு குடும்பத்தில் பிறந்தவர் இல்லை என தன்னைக்கூறிக் கொள்ளும் விஜய், அவரின் ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை எப்படி அரசின் உயர் பொறுப்பில் நியமிக்க முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எப்போதும் விஜய்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், நேற்று, இன்று, நாளை என எப்போம் தவெக தலைவர் விஜய்க்கு தனது ஆதரவு என நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரிவித்துள்ளார்.