அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சீன அரசை எதிர்த்து ஐ.நா தலைமையகம் முன்பாக தீக்குளித்த திபெத்திய ஆர்வலர் லோப்கா ரங்சென்!

திபெத்திய கலாச்சாரம், மொழி மற்றும் பௌத்த அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பதற்காகவே சீன அரசு அடக்குமுறை கொள்கைகளைச் செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. திபெத் தங்களை எப்போதுமே ஒரு சுதந்திர நாடாகக் கருதுகிறது. ஆனால் சீனா திபெத்தில் ஒரு பகுதி தங்களுடையது என உரிமைக்கோரி வருகிறது. இதோடு மட்டுமின்றி திபெத்திய கலாச்சாரங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருவதால் பல திபெத்தியர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துவருகின்றனர்.

இந்த சூழலில் சீனாவின் புதிய “இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சட்டம்” (Promoting Ethnic Unity and Progress Law) நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் அனைத்து இன மக்களிடையே ஒரு பொதுவான தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கானது என்று சீனா கூறுகிறது. ஆனால், இது திபெத்தியர்களைக் கட்டாயமாக சீனமயமாக்கும் ஒரு முயற்சி என்றும், சீனாவுக்கு வெளியே இருக்கும் மாற்றுக்கருத்துடையவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட “இனப்படுகொலையின் சட்ட வடிவம்” என்றும் திபெத்திய அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.

திபெத்திய ஆர்வலர் தீக்குளிப்பு:

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வந்த உபெர் ஒட்டுநரும், திபெத் போராளியுமான லோப்கா ரங்சென் சீன அரசிற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். ஆனால் எதற்கும் செவி கொடுக்காத சீன அரசைக் கண்டித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்குத் துறவி உடையில் கையில் திபெத்திய கொடியுடன் வந்துள்ளார். இதோடு CHINA OUT OF TIBET அதாவது திபெத்தை விட்டு சீனா வெளியேறட்டும் என்ற முழக்கங்களோடு தனக்குத் தானே தீ வைத்து கொண்டார். அங்கு நின்றிருந்த முதலுதவி மீட்புக் குழுவினர் 15 வினாடிகளுக்குள் தீயை அணைத்தனர். ஆனாலும் பலத்த காயங்கள் இருந்தமையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா தலைமையக வளாகத்தில் தீக்குளிப்பதற்கு முன்னதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் ரங்சென் லைவ் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதில் சர்வதேச சமூகத்திற்கும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களுக்கும் சில முக்கிய அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்கள் தங்களுக்குள் இருக்கும் உள்முரண்பாடுகளைத் துறந்து, திபெத்தின் சுதந்திரம் என்ற இறுதி இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திபெத்திய கலாச்சாரம், மொழி மற்றும் பௌத்த அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பதற்காகவே பெய்ஜிங் (சீன அரசு) அடக்குமுறை கொள்கைகளை செயல்படுத்தி வருவதாகக் கடுமையாக சாடினார். தலாய் லாமா முன்னெடுத்த திபெத்திய தன்னாட்சி அரசு (Central Tibetan Administration) என்ற ஜனநாயகக் கட்டமைப்பைத் தக்கவைப்பதும், இந்த சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்வதும் புலம்பெயர்ந்த ஒவ்வொரு திபெத்தியரின் வரலாற்றுப் பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திபெத்தின் சுதந்திர போராட்டத்தில் தீக்குளிப்பு என்பது மிக தீவிரமான ஒரு போராட்ட வடிவமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. ‘ஃப்ரீ திபெத்’ அமைப்பின் தரவுகளின்படி, சீன ஆட்சிக்கு எதிராக 2009 முதல் இதுவரை 150-க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளனர். எனினும், ஆசியாவிற்கு வெளியே இத்தகைய சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். லோப்கா ரங்செனின் இந்த மரணம் உலகெங்கிலும் வாழும் திபெத்திய சமூகத்தை உலுக்கியுள்ளதுடன், திபெத்தில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V