அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

Social Media Day: மக்களைத் தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் சமூக ஊடக தினம் இன்று!

‘சமூக ஊடகங்கள் இல்லையேல் இன்று நானில்லை’ என்று சொல்லும் அளவிற்கு மக்களைத் தன் வசம் கட்டிப்போட்டுள்ளது சோசியல் மீடியாக்கள். சில ஆண்டுகளுக்கு முன்னதாக யாரோ சிலர் மட்டும் தான் தன்னுடைய நண்பர்களுடன் பேசுவதற்கும், தகவல்களைப் பரிமாறுவதற்கும் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்களைப் பயன்படுத்தி வந்தனர். எப்பொழுது அனைவரின் கைகளிலும் தொலைப்பேசி உலாவத் தொடங்கியதோ? அந்நொடியில் இருந்தே சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. ஆம் செய்திகள் முதல் எந்தவொரு தகவல்களையும் மக்களுக்கு உடனடியாகக் கொண்டு செல்வதற்கு முகநூல் ( Facebook), டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் போன்ற பல சோசியல் மீடியாக்கள் உருவெடுத்து இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சோசியல் மீடியாக்கள் தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் சமூக இணைப்புகளில் சமூக ஊடகங்கள் ஏற்படும் மாபெரும் தாக்கத்தை அங்கீகரிக்கவும், அவற்றின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் Mashable நிறுவனத்தால் ஜூன் 30 ஆம் தேதி உலக சமூக ஊடக தினம் கொண்டாடப்படுகிறது.

சமூக ஊடக வளர்ச்சி:

உலகெங்கிலும் நடைபெறும் விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், அடுத்த நாள் செய்தித்தாள்கள் அல்லது ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகளின் மூலம் தான் அறிந்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு நிலை அப்படி இல்லை. எந்தவொரு விஷயம், உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அத்தனையையும் அடுத்த நொடியில் கொண்டு வந்துவிடுகிறது சோசியல் மீடியாக்கள். பேஸ்புக் லைவ், யூடியூப் லைப், இன்ஸ்டா லைவ் என செய்திகளை விரைவில் உலகறிய செய்துவிடுகிறது சமூக ஊடகங்கள். செய்திகள் மட்டுமின்றி தொழில் வளர்ச்சி, சிறு வணிகங்களின் விளம்பரம், தனிப்பட்ட ஒருவரின் திறமையை வெளிப்படுத்துதல், கல்வி மற்றும் சமூகம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நல்ல விஷயங்களுக்காக மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு சமூக புரட்சி செய்ய வேண்டும் என்றாலும் சோசியல் மீடியாக்கள் பெரும் உதவியாக உள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டும் ஜல்லிக்கட்டு புரட்சி போன்ற பலவற்றைச் சொல்லலாம்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கொண்ட சோசியல் மீடியாக்களை முறையாக பயன்படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் சமூக ஊடகங்களின் பரிமாண வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து இன்று AI வரை சென்று விட்டது. அதே சமயம் தவறான தகவல்களைப் பரப்புதல், இணையத் தொல்லைகள், தனியுரிமை பாதிப்பு மற்றும் சமூக ஊடக அடிமைத்தனம் போன்ற சவால்களும் உள்ளன. எனவே சமூக ஊடகங்களப் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்நாளில் மேலும் பரிணாம வளர்ச்சி பெறும் சமூக ஊடகங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V