தமிழகத்தில் கடந்த ஜுன் 20 ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தவெக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எப்படி தமிழக முதல்வரை அவதூறாக பேச முடியும்? என்ற கேள்விகள் எழுந்ததோடு தமிழக முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தவெக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். எந்த சூழலிலும் தன்னை கைது செய்ய நேரிடும் என்பதால் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவதூறாக பேசியது தவறு என்றும், தமிழக முதல்வருக்கு மதிப்பளிக்க வேண்டும் என எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
அனிதா ராதா கிருஷ்ணன் கைது:
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடனே போலீசார் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். நீதிமன்ற காவலில் வைக்க போலீசார் அழைத்து சென்ற போது, தவெக தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்வதாகவும், இதற்காக தொடர்ந்து தன்னிடம் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் தான் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர் என பேசியுள்ளார். ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக வைச் சேர்ந்த எம்.எல்.ஏ கள் ஒவ்வொருவராக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.