அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; இதுவரை 13க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்றார் போல் கடந்த நான்கு தினங்களுக்கு மேலாக மும்பை நகரில் எப்போதும் இல்லாத அளவிற்கு வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. மும்பை நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள இடங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புனேவிற்கான பயண ரயில்கள் நிறுத்தப்பட்டதோடு, ராய்காட் பகுதியில் உள்ள புறநகர் ரயில் சேவைகளும் முடங்கின. மேலும், சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்திலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பொழிவின் தாக்கம் சற்று மந்தமாக இருப்பதால் சேதமடைந்த சாலைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்கள் அனைத்தையும் சரி செய்யக்கூடிய பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

எந்த பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகம்?

மும்பையைப் பொறுத்தவரை பெலாபூர், நவி மும்பை, தானே, கல்யாண், வசாய், பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகளவு பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜுலை 7 என இந்த ஏழு நாட்களில் சாண்டாக்ரூஸ் வானிலை ஆய்வு மையப் பகுதியில் சுமார் 805.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த அளவானது ஜூலை மாதத்தின் சராசரி மழையளவில் சுமார் 94 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக அதிக பெய்துள்ள இடங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இருந்தப் போதும் பருவ மழை தீவிரமடைந்து வருவதாலும், சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V