தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த, ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.