அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சபரிமலைக்கு கோவிலுக்கும் ஏஐ வந்தாச்சு… இனி கூட்ட நெரிசல் இன்றி வழிபாடு மேற்கொள்ளலாம்… எப்படி தெரியுமா?

இன்றைய நவீன உலகத்தில் விவசாயம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப காலங்களாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மேலாண்மை முறை மேலாங்கி உள்ளது. நமக்கு எந்த துறையில் என்ன மாதிரியான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமோ? அதை நொடியில் ஏஐ நமக்கு தந்துவிடும். இப்படி அனைத்து விஷயங்களிலும் மேலோங்கி இருக்கும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட் எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் கோவிலையும் விட்டு வைக்கவில்லை. ஆம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக யாத்திரைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் ஒன்றாக உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில். இந்த சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பையும் கூட்ட நெரிசலையும் கருத்தில் கொண்டு ஏஐ மூலம் ட்ரோன்கள் மற்றும் கணினி அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எப்படி பணியாற்றும்?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உயர் தெளிவுத்திறன் கொண்ட ட்ரோன்கள், மலையடிவாரத்திலிருந்து சன்னிதானம் வரை உள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கோவிலில் எந்த பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். மேலும் எந்த பாதையில் பக்தர்களின் அதிகமாக செல்கிறார்கள்? எங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது? என்பதை உடனுக்குடன் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அனுப்பப்படும். இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவியாக அமையும்.

இதோடு மட்டுமல்ல இந்த தொழில்நுட்பம் கூட்டநெரிசலை மட்டும் கண்காணிக்காது. கூட்டத்தில் பெற்றோர்களிடம் இருந்து பிறந்த குழந்தைகள், வயதான பக்தர்கள் அல்லது உதவி தேவைப்படும் நபர்களை கண்டறியவும் உதவியாக அமையவுள்ளது. எப்படி என்பதில் பலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஆம் தொலைந்து போன நபர்களின் முக அடையாளம் மற்றும் வீடியோ பகுப்பாய்பு தொழில்நுட்பங்களின் உதவியோடு எளிதில் கண்டுப்பிடித்துவிட முடியும். குறிப்பாக நிலக்கல் மற்றும் பம்பா பகுதிகளில் வாகன நிறுத்தும் வசதிகளை ஒழுங்குப்படுத்தவும் ஏஐ பயன்படுத்தப்படவுள்ளது. இதில் மனிதர்களின் தலையீடு இல்லாமல் 26 வாகன நிறுத்துமிடங்கள் டிஜிட்டல் முறையில் நிர்விக்கப்படும்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V