அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சோழர்களின் பெருமையை உலக கேமிங்கிற்குக் கொண்டு செல்லும் சன் ஆப் தஞ்சை.

உலக கேமிங்கிற்குள் சோழ தேசம்!

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கடைய மொபைல் அல்லது லேப்டாக்களில் கேம் விளையாடாமல் இருக்க மாட்டார்கள். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ? அப்போது ஒரு லெவலையாவது முடித்து விட வேண்டும் என தீவிரமாக விளையாடுவார்கள். அந்தளவிற்கு கேமிங் மோகம் மக்களிடம் அதிகளவில் உள்ளது. இதை மனதில் வைத்து தஞ்சையின் தனயன் அதாவது சன் ஆஃப் தஞ்சை என்ற பெயரில் தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டு ஒன்று உருவாகியுள்ளது.

ஆம் சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் சன் ஆப் தஞ்சை கேமிங் உருவாகியுள்ளது. இந்த விளையாட்டான Xbox Series X/S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது. இதில் தென்னிந்தியப் பேர்க்கலை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டு இதுவரை எந்த முக்கிய விளையாட்டிலும் இடம் பெறாத ஒன்றாக உள்ளது. மேலும் களரிப்பயற்றின் அடிப்படையில் சண்டை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை கேமிங்கில் இல்லாத போர்முறையும் இதில் இடம் பெறவுள்ளது. குறிப்பாக முழுமையாக வரலாற்றுப் பின்னணியில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் சோழர் காலத்து போர்முறைகளை அடிப்படையாகக் கொண்டு கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அயலெட் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. மேலும் இதில் கிராபிக்ஸ் மற்றும் கேம்ப்ளே காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கேமிங் கதை எப்படியானது?

சோழ அரண்மனைக்குள்ளேயே தன் வாழ்நாள் முழுவதையும் உல்லாசத்தில் கழிக்கும் சோழ இளவரசனின் கதை இது. தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் போது எதிரிகள் நாட்டை நெருங்கி வருகின்றன.. அப்போது அரசர் மனதிற்கு கடினமாக ஒரு முடிவை எடுக்கிறார். இளவரசரை சாதாரண மனிதன் போன்று உலகிற்கு அனுப்புகிறான். எப்படி எதிரிகளிடமிருந்து நாட்டை போரிட்டு காப்பாற்றுவார். எதிரிகளை எந்த சாதுர்த்தியைப் பயன்படுத்தி வெல்வது? என்பது போன்ற பல சாகசங்கள் இடம் பெறும். மேலும் இளவரசர் அங்குள்ள உழவர்கள், வணிகர்கள் மற்றும் நம்பிக்கையையும், எதிரிகளையும் வென்ற பிறகே நாட்டை ஆளும் கனவைக் காண முடியும் என்பது போன்று கேமிங் அமைந்துள்ளது.

சென்னையில் உள்ள அயலெட் ஸ்டுடியோஸின் 30 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, சோழ காலத்தின் நெல் வயல்கள், கடலோரத் துறைமுகங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட எல்லைப் பகுதிகளை உயிர்ப்பிக்கிறது. ஊர் மன்றங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கள்ளுக் கடைகள் வதந்திகளால் சலசலக்கின்றன. அன்றாட கைவினைகளும் சடங்குகளும் உலகை உயிர்ப்புடன் நிரப்புகின்றன. இது ஒரு பின்னணி அல்ல. இதுவே விளையாட்டின் இதயம்.
விளையாட்டின் அறிமுக டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது; சர்வதேச கேமிங் சமூகத்திடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழில் சோழர் கேமிங்:

தஞ்சையின் தனயன் கேமிங், தமிழில் ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்படும். முதல் முறையாக கேமிங் விளையாடும் ஆர்வலர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு விளையாட்டை அதிலும் சோழர் தேசத்துப் பெருமையோடு விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் தலைமுறையினர் கூட பண்டைய சோழ தேசத்து மற்றும் தென்னிந்தியாவின் மொழி, பண்பாடு மற்றும் நிலப்பரப்பை உள்ளிருந்தே உணர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V