இன்றைக்கு சோசீயல் மீடியாக்களில் டிரெண்டிங் உள்ளது நரேந்திர மோடியின் பதவிக்காலம் குறித்து செய்திகள் தான். ஆமாம் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸில் தீவிரம் காட்டியதால் அக்கட்சியின் முக்கிய பதவியைப் பெற்றார் நரேந்திர மோடி. குஜராத்தின் பிரதமராகவும் இருந்த நரேந்திர மோடிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது டீக்கடைகளில் இன்று டீ போடுவது மற்றும் மக்களிடம் இயல்பாக பழகியதால் அனைவரின் ஆதரவையும் பெற்றார் மோடி. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 26 ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். அன்றைய நாளிலிருந்து ஜுன் 9 ஆம் தேதி வரை 4398 நாட்களில் பதவியில் இருந்து நிறைவு செய்துள்ளார். இந்தியாவின் வரலாற்றில் ஜவஹர்லால் நேருவை விட மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மோடி.
ஆம் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1952 ஆம் ஆண்டு மே 13 ல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 4397 நாட்கள் அதாவது 12 ஆண்டுகள் மற்றும் 14 நாட்கள் பதவியில் இருந்தார். ஆனால் மோடி தொடர்ந்து மூன்று முறை தடையின்றி அப்பதவியை வகித்து வருகிறார்.இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியதற்காக முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா மற்றும் பல்வேறு தேசிய தலைவர்கள் மோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில், மக்களின் தொடர்ச்சியான நம்பிக்கையைப் பெற்றிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சக குடிமக்களின் நலன் ஆகியவற்றின் மீதே நமது கூட்டு கவனம் தொடர்ந்து இருக்கட்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நரேந்திர மோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.