அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழக சபாநாயகர் யார்? சட்டப்பேரவை செயலாளரிடம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன்!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பிற்குப் பிறகு எப்போது, தவெக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இளைஞர்கள் மற்றும் பெருவாரியான மக்களின் ஆதரவோடு தவெக வென்றிருந்தாலும் தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 118 இடங்களை கூட்டணி கட்சிகள் வென்றிருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்போது எந்த கட்சியினருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் தான் விரைவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தவெக தலைவர் விஜய் பிற கட்சிகளின் ஆதரவு கோரினார். இந்நிலையில் திமுக காங்கிரஸ் இடையே நிலவி வந்த 10 ஆண்டு கால கூட்டணியை முறித்துவிட்டு காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிகளிடம் தங்களுக்கு ஆதரவு தர கோரியுள்ளார் விஜய்.

இதனிடையே தவெக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஆட்சி அமைக்க உள்ளது குறித்தும், தற்காலிக சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சட்டபேரவை செயலாளர் சீனிவாசனை, தலைமை செயலகத்தில் சந்தித்து தவெக எம்.எல்.ஏ செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V