அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

எந்த சூழலிலும் தவெகவிற்கு ஆதரவு இல்லை – அதிமுக திட்டவட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து 108 இடங்களில் வெற்றி வாகை சூடியிருந்தாலும் தனிப்பெரும்பான்யுடன் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில் தான் திமுகவைத் தவிர்த்து பிற கட்சிகளிடம் தங்களது ஆதரவை நாடி வருகிறார் விஜய். காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை விஜய்க்கு வழங்கியுள்ள நிலையில், இந்த ஆதரவு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பல ஊடகங்களில் எடப்பாடி தலைமையிலான அதிமுக விஜய்க்கு தங்களது ஆதரவை அளிக்கவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த தகவல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன? தவெகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, தவெகவிற்கு ஆதரவு என ஊடகங்களில் வரக்கூடிய செய்திகள் முற்றிலும் முரணானது. எந்தவொரு சூழலிலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு எங்களுடைய ஆதரவு கிடையாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V