அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நிமிடத்திற்கு ₹2.5 லட்சம் வீணடிப்பு: நாடாளுமன்ற முடக்கத்தால் அரசு கருவூலத்திற்கு ஏற்படும் பெரும் நிதி இழப்பு!

ஒரு மணி நேரத்திற்கு ₹1.5 கோடி வரை செலவாகும் நிலையில், நாடாளுமன்ற அமளிகளால் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன!

அரசியல் காரணங்களாலும் காரசாரமான விவாதங்களாலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடிக்கடி முடக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தை இயக்குவதற்கும் உறுப்பினர்களுக்காகவும் மக்கள் வரிப் பணத்தில் இருந்து எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

நிபுணர்களின் கணக்கீட்டின்படி, இந்திய நாடாளுமன்றத்தை இயக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு தோராயமாக ₹2.5 லட்சம் செலவாகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ₹1.5 கோடி வரை செலவிடப்படும் நிலையில், 6 மணி நேரம் கொண்ட ஒரு வேலை நாளுக்கு ₹9 கோடி வரை அரசு கருவூலத்திலிருந்து செலவிடப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் போன்ற முக்கிய கூட்டத்தொடர்களில் சுமார் 35 முதல் 40 மணி நேரம் அமளியால் வீணடிக்கப்படும்போது, நேரடி நிதி இழப்பு ₹50 கோடி முதல் ₹60 கோடி வரை உயர்கிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்காக (எம்.பி.) அரசு செய்யும் செலவு.

நாடாளுமன்ற வளாகப் பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகள் தவிர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்காகவும் கணிசமான தொகை செலவிடப்படுகிறது.மாதச் சம்பளம் மற்றும் நிலையான படிகள்

ஒவ்வொரு எம்.பி.க்கும் வழங்கப்படும்மாதச் சம்பள விவரம்:

●அடிப்படைச் சம்பளம்: மாதம்

●₹1,24,000தொகுதிப் படி: மாதம்

●₹87,000அலுவலகப் படி: மாதம்

●₹75,000(அலுவலகச் செலவுகளுக்கு ₹25,000 + உதவியாளர் ஊதியத்திற்கு ₹50,000)

இதன் மூலம், ஒரு எம்.பி.க்கான நிலையான மாத வருவாய் ₹2.86 லட்சமாக உள்ளது. இது ஆண்டுக்கு தோராயமாக ₹34.32 லட்சமாகும்.

இதர சலுகைகள் மற்றும் வசதிகள்நிலையான சம்பளம் தவிர, உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன:

தினசரிப் படி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹2,500.

பயணச் சலுகைகள்: எம்.பி. மற்றும் அவரது துணைவருக்கு ஆண்டுக்கு 34 இலவச உள்நாட்டு விமானப் பயணங்கள், வரம்பற்ற முதல் வகுப்பு ரயில் பயணம் மற்றும் சாலைப் பயணப் படிகள்.

இருப்பிடம் மற்றும் மின்சாரம்/குடிநீர்: புதுடெல்லியில் இலவசத் தங்குமிடம், ஆண்டுக்கு 50,000 யூனிட் இலவச மின்சாரம், 4,00,000 லிட்டர் இலவசக் குடிநீர் மற்றும் ஆண்டுக்கு ₹1.5 லட்சம்

தொலைபேசி/இணையக் கட்டணப் படி.மருத்துவச் சலுகை: மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் இலவச மருத்துவச் சிகிச்சை.

இந்தச் சலுகைகளையும் சேர்த்தால், ஒரு எம்.பி.க்காக அரசு செய்யும் நேரடிச் செலவு ஆண்டுக்கு ₹50 லட்சம் முதல் ₹65 லட்சம் வரை இருக்கும். இதுதவிர, தொகுதி மேம்பாட்டுக்காக எம்.பி. எல்.ஏ.டி.எஸ். (MPLADS) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுத் திறன் குறித்து விவாதங்கள் வலுத்து வரும் சூழலில், மக்கள் வரிப்பணத்தின் மதிப்பை உணர்ந்து அவையைச் சுமுகமாக நடத்துவது அவசியம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of லோகேஷ் ராஜவேல்

லோகேஷ் ராஜவேல்