அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கேரளா இனி கேரளம் ஆகுமா? மாநில பெயர் மாற்றும் மசோதா மக்களவையில் அறிமுகம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. நீட் முறைகேடு விவகாரம், டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம் ஏற்பட்டது. 16 வது நாளான இன்று எதிர்க்கட்சிகள் இடையே ஏற்பட்ட கடும் அமலி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்ப்பாயச் சீர்த்திருத்தம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, கேரள மாநில பெயர் மாற்ற மசோதா மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா போன்றவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றம் செய்வது குறித்த மசாதோ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏன் கேரளா என்ற பெயரை மாற்ற வேண்டும்? எப்போது மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே..

கேரளா இனி கேரளம் ஆகுமா?

மலையாள மொழியில் கேரளா என்பதை கேரளம் என்று அழைக்கக்கூடும். ஆனால் இந்திய அரசியலமைப்பின் ஆங்கில மொழிப்பதிப்பில் கேரளா என்று உள்ளது. கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்ற மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டன. அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் மலையாள மொழிகள் பேசக்கூடிய மாநிலத்தின் பெயர் கேரளா என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அளிக்க வேண்டும் என்ற சட்ட நடைமுறை உள்ளது.

அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி கேரளா சட்டப்பேரவையில் மாநிலத்தின் பெரை கேரளா என்பதிலிருந்து கேரளம் என மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் அரசியலமைப்பின் பிரிவு 3 ன்டி கேரளா என்பதை கேரளம் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், கேரளா என்பதை கேரளம் என்று மாற்றுவதற்கான மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மற்றும் அரசியலமைப்பில் திருத்தம் செய்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றிய பிறகே முழுமையாக நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V