அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ஆன்லைனில் பட்டாசு வாங்கப் போறீங்களா? அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் விருதை மகள் கீர்த்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குறைந்த விலை மற்றும் அதிக தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பி அடையாளம் தெரியாத இணையதளங்களில் பட்டாசுகளை ஆர்டர் செய்து முன்பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

போலி இணையதளங்களில் எச்சரிக்கை:

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக பல்வேறு விளம்பரங்கள் வெளியாகலாம். குறிப்பாக, சந்தை விலையைவிட மிகக் குறைவான விலையில் பட்டாசுகள் கிடைக்கும் எனக் கூறப்படும் விளம்பரங்களை பொதுமக்கள் கவனமாக அணுக வேண்டும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மற்றும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். தெரியாத இணையதளங்களில் பணம் செலுத்துவதையும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முக்கிய தகவல்களை பகிர வேண்டாம்:

ஆன்லைன் கொள்முதல் செய்யும்போது வங்கி விவரங்கள், கடவுச்சொல், OTP உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த விலை என்ற காரணத்திற்காக அவசரமாக பணம் செலுத்தாமல், விற்பனையாளரின் விவரங்களை சரிபார்த்த பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் இணையவழி நிதி மோசடிகளில் சிக்குவதைத் தவிர்க்க முடியும்.

சைபர் மோசடிக்கு 1930:

ஆன்லைன் நிதி மோசடியில் யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.மோசடி தொடர்பான பணப் பரிவர்த்தனை விவரங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பிற ஆதாரங்களை பாதுகாத்து வைத்து புகார் அளிப்பது நடவடிக்கைக்கு உதவும்.

தீபாவளி கொள்முதல் காலத்தில் போலியான சலுகைகளால் பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தனா கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sneha Venkatachalam

Sneha Venkatachalam