அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

மஹிந்த ராஜபக்ஸவின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு – மகனும் சிறையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ எதிர்வரும் 13ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபரான ஷிராந்தி ராஜபக்ஸவை சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி கைது – மகன் தொடர்ந்தும் சிறையில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கிருலபனை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று காலை சுமார் 2 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்திய நிலையிலேயே, ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

”சிரிலிய சவிய” என்ற திட்டமொன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஷிராந்தி ராஜபக்ஸ, நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஸ, இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு ஏயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடி மற்றும் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான கிறிஸ் முதலீடு தொடர்பில் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், கிறிஸ் முதலீடு தொடர்பில் வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.

அதனால், அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh