இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது. திரையரங்குகளுக்குச் சென்று படம் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. முதன்மைக் கதாபாத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் மற்றும் எதார்த்தமான சினிமாவைப் பார்க்க மட்டும் தான் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இல்லையென்றால் அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடியில் எப்போது படங்கள் வெளியாகும்? என்ற காத்திருப்பு மக்களிடம் அதிகரித்துவிட்டது.
அதிலும் இரண்டு மணி நேரம் திரைப்படங்களை விட வெப் சீரிஸ் அதாவது இணையத் தொடரைப் பார்க்க ஒரு சில ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களின் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக பல இணையத் தொடர்கள் வெளியாகிவருகிறது. இந்த வரிசையில் தற்போது
வட்டம், எப்ஐஆர், கல்யாண சமையல் சாதம் போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகர் பிரவீன் முத்துரங்கன் எழுதி நடித்துள்ள லோக்கல் டைம்ஸ் என்ற இணையத் தொடர் வருகின்ற மார்ச் 13 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கும் இந்த இணையத் தொடரில் நடிகர் ரிஷிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதோடு சின்னி ஜெயந்தி, நந்திதா, தாஸ் போன்றோர் நடித்துள்ளனர். ரசிகர்களைக் கவரும் வகையில் முற்றிலும் நகைச்சுவை தொடராக உருவாகியுள்ளது.
இந்த தொடர் மொத்தம் 7 எபிபோடுகளாக வெளியாகும் எனவும் இணையத்தில் அறிவிப்பு வெளியாகிறது. நான்கு நண்பர்கள் இணைந்து வார பத்திரிக்கையை எப்படி நடத்தப் போகிறார்கள்? என்பதை நகைச்சுவை உணர்வோடு எடுத்திருக்கும் திரைப்படமாக உள்ளது. உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் 240 நாடுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.