இன்றைக்கு சிலிண்டர் பயன்பாடு இல்லாத வீடுகளே இல்லை. நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலவாணி மதிப்பைக் கருத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகிறது. இந்த வரிசையில் மார்ச் மாதத்திற்கான விலை உயர்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் படி வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 60 ரூபாயும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 114 மற்றும் 50 காசுகள் அதிகரித்துள்ளது.
எவ்வளவு உயர்வு?
சென்னையில் வணிக சிலிண்டரின் விலையானது ரூ.115 உயர்ந்து ரூ.2043. 50 க்கு விற்பனையாகிறது. இதே போன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் 14.2 கிலோ எடைக் கொண்ட ரூ. 60 அதிகரித்துள்ளது. இதன் படி ரூபாய் 853 லிருந்து ரூ.928க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வானது தங்களது பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் வேதனையடைந்துள்ளனர்.