அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு; திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது; வலுக்கும் கண்டனங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அதில் சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பானரை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.. மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் உன்னை சட்டமன்றத்தில் வைத்து பார்த்துக் கொள்கிறோம் என ஒருமையில் அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்தாகவும் போலிசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் இன்று விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்த மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவதாக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சச்சரவைக் கிளப்பியுள்ளது.

யார் இந்த மார்க்கண்டேயன்?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்ட வந்த அவர் அதிமுகவில் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து 2019 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், இவரது கைதிற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.

சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? – மு.க. ஸ்டாலின்

தவெக ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்றும், தற்போது நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சாத்தானின் ஆட்சியா? என கடுமையாக விமர்சனத்தை மு.க. ஸ்டாலின் முன் வைத்துள்ளார். மேலும் அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V