அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நீட் முறைகேடு, வேலையின்மைக்கு எதிராக CJP போராட்டம்: டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) சார்பில் தலைநகர் டில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டில்லி ஜந்தர் மந்தர் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுக்கப் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு வன்முறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sruthi Balasubramanian

Sruthi Balasubramanian