அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழக பொது பட்ஜெட் 2026-2027: வெற்றி என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு; முழு விபரம் இங்கே!

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பெற்ற பின்னதாக நடப்பு நிதி ஆணடுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது உரை நிகழ்த்திய நிதியமைச்சர், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னதாக குறுகிய காலத்திலேயே பல்வேறு துறைகளில் கணிசமான முன்னேற்றங்களும், மக்களின் நம்பிக்கைகயையும் பிரதிபலிக்கும் பல முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன என தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளின் அறிவித்தப்படி அனைத்தும் திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்ததோடு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பட்டியல் இங்கே…

தமிழக பட்ஜெட் 2026:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உலகத்தரம் வாய்ந்த, நீடித்த மற்றும் பாதுகாப்பு தன்மைக் கொண்ட சாலை உட்கட்டமைப்பை வழங்குவதற்காக, சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்திற்காக ரூ.9300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூபாய் 21,524 கோடியும், சென்னைக்கு 1000 புதிய AC மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும் எனவும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பேருந்து பணிமனைகளிலும் EV உட்கட்டமைப்பு மேம்பாடு செய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூபாய் 7675 கோடி மானியம் வழங்கப்படும் எனவும், செயல்திறன் இடைவெளி நிதியுதவி ரூ. 2650 கோடி ஒதுக்கீடு மற்றும் பங்கு மூலதன உதவி ரூபாய் 1005 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கானத் திட்டங்கள்:

சென்னையில் விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு -பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் ஆகிய மூன்று புதிய மெட்டரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும் எனவும், சென்னை மாநகரின் அனைத்து நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்கப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் பட்ஜெட் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு 14,984 கோடி ரூபாய் ஒதுக்கீடும், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN Al Mission) மூலம் சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகர்ப்புர நிர்வாகம் மற்றும் சமூகநல நிர்வாகம் போன்ற துறைகளிலும் தேவையான இதர துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தப்படுவதாகவும் அறிவிப்பு.

கல்வி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு:

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூபாய் 44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் 10 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூபாய் 125 கோடியும், 5ஆயிரம் அரசுப்பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும் எனவும் பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் போதைப் பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும் எனவும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
2031-ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும். பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்யும் முயற்சிகள் எடுக்கப்படும். பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள் உறுதி செய்யப்படும் எனவும் மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தாய்மாமன் மற்றும் அண்ணன் சீர்:

பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளிலிருந்து தாய்மாமன் சீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்காக ரூ. 755 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாற்று பாலினத்தவருக்காக திறன் பயிற்சி , சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் ‘அரண்’ தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ.50,000 வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் வழங்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இளைஞர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்க்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம், நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V