திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்போகிறார்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான நேற்றைக்குத் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் திலக் யார்?
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். தன்னுடைய இளம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கட்சித் தொண்டராக தன்னுடைய பணியைத் தொடங்கினார். மத அமைப்புகள் மற்றும் பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தியுள்ளார். தற்போது நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிருப்தியில் மூத்த தலைவர்கள்:
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்யசபா செல்வதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் தான் இளைஞர் காங்கிரஸ் மூலம் கட்சிப் பணியைத் தொடங்கிய கிறிஸ்டோபரை மாநிலங்களவை உறுப்பினராக அறிமுகம் செய்துள்ளது.
காங்கிரஸ் மேலிட முடிவிற்குக் காரணம்?
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் இளைஞர் காங்கிரஸ், எஸ்சி, எஸ்டி பிரிவு ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் கிறிஸ்டோபர். தற்போது மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தன்னுடைய பணியை திறம்பட செய்து வருகிறார். குறிப்பாக பதட்டமான சூழல் நிலவும் மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் களப்பணியாற்றியுள்ளார். இதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் கிறிஸ்டோபர். இவ்வாறு பல சூழல்களில் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டதன் பலனாய் தற்போது மாநிலங்களவைக்குத் தமிழகத்திற்காக குரல் கொடுக்கவுள்ளார் கிறிஸ்டோபர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல மூத்த தலைவர்கள் இருந்தாலும் அவர்களையெல்லாம் ஓரம் கட்டி, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்தால் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் கட்சியின் மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.