அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கை செயற்படாது – ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு

இலங்கையின் வான் பரப்பு மற்றும் நிலப் பரப்பு ஆகியவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு, நிகவரெட்டிய பகுதியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறே இரு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் வேட்பாளர், தான் வெற்றியீட்டிய பின்னர் கச்சத்தீவை கைப்பற்றுவதாக தெரிவித்திருந்ததையும் ஜனாதிபதி இதன்போது நினைவூட்டியிருந்தார்.

எனினும், கச்சத்தீவுக்கான உரிமை இலங்கைக்கே காணப்படுகின்றது என இந்திய உச்சநீதிமன்றத்தில், அந்த நாட்டு அரசாங்கம் அண்மையில் தெரிவித்துள்ளதாகவும், மத்திய அரசாங்கம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தாங்கள் யாருடனும் மோதிக் கொள்ளாது, இந்தியாவுடன் நற்புறவை பேணும் விதம் தொடர்பில் தமக்கு நன்கு தெரியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனால், இலங்கை அரசாங்கம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் சரியான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி, சரியான முறையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

ஒரு பக்கத்திற்கு இல்லாமல், நடுநிலையான சர்வதேச கொள்கையுடனேயே செயற்பட்டு, நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்ய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

மத்திய கிழக்கு மோதலில் இலங்கை நடுநிலை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் போது, இலங்கை நடுநிலையான கொள்கையை பின்பற்றி வருகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றர்.

அமெரிக்காவிற்கு சொந்தமான போர் விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான அனுமதி கோரப்பட்ட போது, அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்திருந்ததையும் ஜனாதிபதி இதன்போது நினைவுப்படுத்தினார்.

அத்துடன், ஈரானுக்கு சொந்தமான போர் கப்பல்கள் இலங்கைக்குள் வருவதற்கான அனுமதியை கோரிய போதிலும், அதனையும் இலங்கை நிராகரித்திருந்ததாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இலங்கை எந்தவொரு நாட்டிற்கும் அடிப்பணியாக, நடுநிலையான சர்வதேச கொள்கையை பின்பற்றும் நாடாக செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh