அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

காசநோய் மருந்துகளை இலங்கைக்கு வழங்கிய இந்தியா

காசநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கான மருந்து வகைகளை இந்திய அரசாங்கம், இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இதன்படி, சுமார் 3 தொன் எடையுடைய, 5.2 கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய காசநோய் மருந்துத் தொகுதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் சுகாதார அமைச்சில் வைத்து இந்த மருந்து வகைகளை கையளித்துள்ளார்.

15 லட்சத்திற்கும் அதிகமான காசநோய் மருந்து வகைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய முதல் தர மருந்து வகைகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருந்துகள் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் ஆதரவுடன் பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை மருந்து வகைகள் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, வருடமொன்றிற்கு சுமார் 8500 முதல் 9500 வரையான காசநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அத்துடன், காசநோய் காரணமாக வருடமொன்றிற்கு இலங்கையில் 500 முதல் 600 வரையான மரணங்கள் பதிவாவதாகவும் சுகாதார அமைச்சின் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பரவி வரும் நோய்களை கட்டுப்படுத்த இந்திய தொடர்ச்சியாக பல்வேறு வகையிலான உதவிகளை வழங்கி வருகின்றது.

இதன்படி, இலங்கையில் அதிவேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் கடந்த மாதம் 500 லீட்டர் தொழில்நுட்ப மலத்தியோன் வழங்கப்பட்டது.

இவ்வாறு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வகையிலான உதவிகளை வழங்கி வருகின்றது.

மேலும், இலங்கை கடந்த காலங்களில் எதிர்நோக்கிய இயற்கை அனர்த்தங்களின் போதும் இந்திய அரசாங்கம் அத்தியாவசிய உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh