அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பருத்தி சாகுபடி முதல் ஜவுளி ஆலை வரை.. ‘வெள்ளைத் தங்கம்’ பருத்தி குறித்த ஓர் பார்வை!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மட்டுமல்ல இன்றைக்கு எப்போது நினைத்தாலும் புத்தாடைகளை வாங்க கூடிய சூழல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நாம் தினமும் அணியும் சட்டை, சுடிதார், சேலை, வேஷ்டி போன்ற பல ஆடைகளின் பின்னணியில் இருக்கும் முக்கியமான மூலப்பொருள்களில் ஒன்று பருத்தி. இந்த மென்மையான வெள்ளை நார், நமது அன்றாட வாழ்க்கையில் மட்டுமில்லாமல் விவசாயம், ஜவுளி, மருத்துவம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. இப்படி அனைத்துத் துறைகளில் சிறப்புப்பெற்றுள்ள வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தியின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 ஆம் தேதி உலக பருத்தி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் இவற்றின் சிறப்பு குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..

விதையிலிருந்து ஆடை வரை:

விவசாயிகளிடமிருந்து ஒரு சிறிய பருத்தி விதையிலிருந்து தொடங்கும் பயணம், வயலில் செடியாக வளர்ந்து, காயாகி, அதிலிருந்து நார் பிரிக்கப்பட்டு நூலாகவும், பின்னர் துணியாகவும் மாறுகிறது. இறுதியில் அந்தத் துணி நாம் அணியும் ஆடையாக நம்மை வந்தடைகிறது. இத்தகைய ஒவ்வொரு பயணத்திலும் விவசாயிகள், தொழிலாளர்கள், நூற்பாலை ஊழியர்கள், நெசவாளர்கள் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் என அத்துணையும் நினைவுக்கு வருகிறது. இதோடு மட்டுமின்றி மருத்துவ பயன்பாடு, கயிறுகள் மற்றும் தொழில்துறை பொருட்கள், கால்நடை தீவனத்தில் பயன்படுதல் என பல்வேறு தொழில்கள் மற்றும் வாழ்வியலோடு ஒவ்வொரு நாளும் நம்முடன் பயணித்து வருகிறது பருத்தி.

தமிழகத்திலும் முக்கியமான பயிர்:

கரிசல் மண்ணில் அதிகம் விளையக்கூடிய பருத்தி சாகுபடியான தற்போது குறைந்து வருகிறது. மழை, நீர்வளம், மண் தன்மை, பூச்சித் தாக்குதல் மற்றும் சந்தை விலை போன்ற பல்வேறு காரணிகள் பருத்தி விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பருத்தி விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரிப்பது, பருவநிலை மாற்றம், பூச்சித் தாக்குதல் மற்றும் சந்தை விலை ஏற்ற இறக்கம் போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய பொருளாதாரத்தை நிறைவு செய்யும் என்ற நோக்கத்தில் பயிடப்படும் பருத்தியின் விளைச்சல் சரிந்து வருவது மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இச்சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் சரியான சந்தைத் தகவல்கள் கிடைத்தால், பருத்தி சாகுபடியை மேலும் நிலையானதாகவும் லாபகரமானதாகவும் மாற்ற முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

பருத்தி உற்பத்தியை எடை அடிப்படையில் கணக்கிடும்போது, 2024-25ஆம் ஆண்டில் சுமார் 5.06 மில்லியன் டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் இந்த அளவு சுமார் 4.95 மில்லியன் டன்னாக குறையும் என தற்காலிக மதிப்பீடு தெரிவிக்கிறது. அதாவது, முந்தைய பயிர் பருவத்துடன் ஒப்பிடும்போது சுமார் 0.11 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V