தமிழகத்தில் சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாசியர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களின் தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்க்கும் விதமாக இன்று சென்னையில் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாசியர் மற்றும் தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், இடது சாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் உத்தரவின் பேரில், கல்வி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு சம்பவம் அனேகமாக எங்குமே நடந்தது இல்லை என்றும் தலைமை செயலாளரின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று தெரிவித்தார். மேலும் பதவிக்கு தகுதி இல்லாதவரை பதவி விலக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்தார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், முதல் அமைச்சருக்கும் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு இயங்கி வருகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முதல்வர் தான் பதிலளிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆதரவினால் தான் தமிழகத்தில் தவெக அரசு நீடித்து ஆட்சி செய்கிறது என்று தெரிவித்ததோடு நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? என தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளுங்கள் எனவும் பெ. சண்முகம் கூறியுள்ளார்.