அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

16 வருட நீண்ட காத்திருப்புக்குப் பின் மீண்டும் உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின் அணி!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், ஸ்பெயின் அணியும் நேருக்கு நேர் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தங்களுடைய ஆட்டத்தை விறு விறுப்பான விளையாடின. முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரு அணிகளும் மாறி மாறி வெற்றிக்காக விளையாடினர். ஆனாலும் முதல் பாதியைப் போன்று இரண்டாவது பாதியும் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவர்களால் எந்த கோல் போட முடியாமல் திணறினர்.

முதல் மற்றும் இரண்டாவது பாதி என 90 நிமிட ஆட்டத்தின் முடிவிலும் எவ்வித கோல் இன்றி சமநிலையில் இருந்தது. இதனால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டல் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தருணத்தில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து அபார முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V