அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

72 வது தேசிய திரைப்பட விருதுகள்; தமிழ் சினிமா பெற்ற விருதுகளின் பட்டியல் இங்கே!

72 வது தேசிய திரைப்பட விருதிற்காக கடந்த 24 மொழிகளில் 161 திரைப்படங்கள் 16 பிரிவுகளின் கீழ் போட்டியிட்டன. 2024 ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான சுமார் 400 திரைப்படங்கள் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இதில் என்னென்ன திரைப்படங்கள்? எதற்காக விருதுகளைப் பெற்றது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளாலம்.

தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற தமிழ் படங்கள்:

சிறப்பு விருதுக்கான பிரிவில் கார்த்திக் நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் ஒலிக்கலவை பொறியாளரான சுரேன் ஜிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கும், சிறந்த இயக்குநருக்காக அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது சச்னா நமிதாஸூக்கும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியானன கேப்டன் மில்லர் படத்துக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு தேசிய விருது நடிகர் தனுஷ்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுக்கான படமாக கேப்டன் மில்லர் தேர்ந்தப்பட்டு, அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம்’ திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே மலையாள படம் என்ற சாதனையை பிரமயுகம் படைத்துள்ளது. ஏ, ஆர். எம் என்ற மலையாள படத்துக்காக வைக்கம் விஜயலெட்சுமிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V