அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அதிக கோல்களைப் பெற்று இமாலய சாதனைப் படைத்தார் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி!

கால்பந்து உலகில் பல எண்ணற்ற சாதனைகளை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார் மெஸ்ஸி. தன்னுடைய 18 வயது முதல் உலகக் கோப்பை விளையாடிவருகிறார் மெஸ்ஸி. கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற தொடரில் மட்டும் அதிகபட்சமாக 7 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நகரில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி ஜுலை 22 ஆம் தேதி ஜெ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா – ஆஸ்திரியா அணிகள் மோதின. உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அல்ஜீரியாவுக்கு எதிரான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரு போட்டிகளிலேயே ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி. இந்த வெற்றியின் மூலம் க்ளோஸின் 17 உலகக் கோப்பை வெற்றிகள் என்ற சாதனையை மெஸ்ஸி சமன் செய்திருந்தார். ஆஸ்திரியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் 18 வெற்றிகளுடன் க்ளோஸை முந்தி இந்த சாதனையை மெஸ்ஸி தன் வசப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 16 கோல்களுடன் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவராக வலம் வந்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். மேலும் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (28 போட்டிகள்) மற்றும் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் (18 வெற்றிகள்) என்ற சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார். மேலும் உலகக் கோப்பையில் 2489 நிமிடங்கள் என அதிக நேரம் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

மெஸ்ஸியின் சாதனை:

கடந்த 2014, 2022, 2026 என மூன்று வெவ்வேறு உலகப்போப்பை தொடர்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் மெஸ்ஸி. தற்போதைய உலகப்கோப்பையில் பாக்ஸின் மையத்தில் இருந்து இடது ஓரத்தின் கீழ் வழியாக கோல் அடித்து மாஸ் காட்டினார் மெஸ்ஸி. முதல் 45 நிமிடங்கள் கிடைத்ததும் 7 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த பாதியில் 54 வது நிமிடத்தில் ஆஸ்திரிய வீரர் மார்செல் சபிட்சரின் கோல் முயற்சியை எமிலியானோ மார்டினெஸ் அதை முறியடித்தார். ஏற்கனே அல்ஜிரியா அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டியில் மெஸ்ஸி 3 கோல்களை அடித்திருந்தார். தற்போது 2 கோல்கள் என நடப்பு உலகப்கோப்பையிலேயே 5 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V