அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் பங்கேற்பு!

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை’ முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs’ என்கிற விழிப்புணர்வு ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தினை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அந்த உறுதிமொழியில், போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழகத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என்றும் போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மேலும் போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதோடு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கொள்கிறேன் என போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்பு மாரத்தானில் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V