இயக்குநர் இமயம் பாரதிராஜா மரணத்தைத் தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் இறப்பு செய்தி திரையுலகத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய 73 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் பாக்யராஜிற்கு திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பாக்யராஜ் திரையுலகில் கடந்து வந்த பாதை குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம்.
பாக்யராஜின் இளமைக்காலம்:
கடந்த 1953 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி கோவையில் பிறந்தார் பாக்யராஜ். தன்னுடைய சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அதீத ஈடுபாடோடு இருந்தவர். இந்த ஆர்வத்தால் பல மேடை நாடகங்களை எழுதியும், இயக்கியும் நடித்து வந்தார் பாக்யராஜ். கொங்கு மண்டலத்திற்கே உரிய குசும்புத் தனமான பேச்சின் தனக்கென ஓர் நட்பு வட்டாரத்தை வளர்த்துக் கொண்டவர். சினிமாத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்குச் சென்று இயக்குநராவதற்கான வாய்ப்பைத் தேடி அலைந்துள்ளார் பாக்யராஜ்.
திரைத்துறை பயணம்:
சினிமா மீது கொண்ட ஆர்வத்தாலும், காதலினாலும் தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்ட பாக்யராஜிற்கு நல் வாய்ப்பாக அமைந்தது இயக்கநர் இமயம் பாரதிராஜாவுடனான நட்பு. கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய முதல் படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமானவர் பாக்யராஜ். அப்படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருப்பார். இதே போன்று கிழக்கே போகும் ரயில் படத்திலும் கவுண்டமனியுடன் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனமும், ஒரு கைதியின் டைரின் படத்திற்கு வசனம் எழுதிவர் பாக்யராஜ். இவ்விரு படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததையடுத்து திரைக்கதை மன்னன் என பெயர் பெற்றார் பாக்யராஜ்.
உதவி இயக்குநர், திரைக்கதை, வசனம், இயக்கம் என பல முகத் தன்மைக் கொண்டவராக வலம் வந்த பாஜ்யராஜ் நடிகராகவும் களம் இறங்கினார். விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னுப்போச்சு, டார்லிங் டார்லிங் போன்ற படங்களில் நடித்து வெற்றி வாகை சூடினார் பாக்யராஜ். இன்று போய் நாளை வா படத்தை இயக்கியதோடு அதில் ஹீரோவாகவும் நடித்தது மிகப்பெரிய ஹிட் அடித்தது. பெண்ணை மூன்று இளைஞர்கள் சவால் விட்டு காதலிப்பதும், அப்பெண்ணை கவர்வதற்கு அவர்கள் பேசும் காமெடித் தனமாக வசனங்களினால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார் பாக்யராஜ்.
இதோடு மட்டுமின்றி இன்று வரை கணவர்களைக் கவர்வதற்கு பெண்கள் முருங்கைக்காய் சமைத்து வைத்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் சூப்பர் ஹிட் அடித்தது முந்தானை முடிச்சு. அடுத்ததாக இது நம்ம ஆளு, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சுந்தர காண்டம், அண்ணன் தங்கை பாசத்தையும், அவர்கள் வாழ்நாளில் படும் கஷ்டத்தையெல்லாம் காமெரி கலந்து எடுத்துரைக்கும் தாவணி கனவுகள் படங்களெல்லாம் இன்று வரை மக்கள் மனதை விட்டு நீங்கா இடம் பெற்றிருக்கிறது.
இயக்குநர்களை உருவாக்கிய பாக்யராஜ்:
சினிமாத்துறையில் எப்படி இயக்குநர் இமயம் பாரதிராஜா பல புதிய இளம் இயக்குநர்களை வளர்த்துவிட்டாரோ? அதே போன்று பாக்யராஜூம் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியுள்ளார். 90 களில் இருந்து பாண்டிராஜன், ரா. பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி.எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குநர்களாக வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.