தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 12 மாணவி. இவர் கடந்த மார்ச் 9 ஆம் வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போய் உள்ளார். இவரை குடும்பத்தினர் தேடியும் கிடைக்காத போது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருக்கு கிடைத்த சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மதுரை காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட தர்மமுனீஸ்வரன் மற்றும் பலரிடம் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின் பேரில், குளித்தூர் போலீசார் தூத்துக்குடி மாவட்ட போக்சா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இதோடு சந்தேகத்தின் அடிப்படையில் பல சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த மே 21 ஆம் தேதி இவ்வழக்கிற்கான தீர்ப்பு வருகின்ற மே 25 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் தற்போது தண்டனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரு பிரிவுகளிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
76 நாளில் தீர்ப்பு:
விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை். குறிப்பாக பெண் குழந்தைகளை தனியாக எங்கேயும் அனுப்ப முடியவில்லை. போதைப்பொருள் பழக்கம் தான் இதற்கு பிரதான காரணம் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்கள் நடைபெற்றது. மாதர் சங்கத்தினர் ஒருபுறமும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வாதிகள், அரசியல் வாதிகள் என பலர் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மிக தீவிரமாக விசாரணையானது நடைபெற்றது. இதன் பலனால் வெறும் 76 நாட்களில் மாணவியை கொலை செய்த குற்றவாளிக்கு தண்டனை வழங்கியிருப்பது பெரும் பாரட்டைப் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு:
இன்றைக்கு சோசியல் மீடியாக்கள் அனைத்திலும் தூத்துக்குடி மாணவிக்கு கிடைத்த நீதி குறித்த பதிவுகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றம் நடந்த 76 நாட்களில் மிக விரைவாக விசாரணை முடிக்கப்பட்டு இந்த தண்டனை வழங்கபட்டு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் ஆத்மா இனி நிம்மதியடையும். இனி பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் ஒவ்வொருவருக்கும் இந்த தீர்ப்பு நினைவில் வர வேண்டும். இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறை மற்றும் நீதி துறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்பது போன்ற பல்வேறு பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.