அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கன்னிப்பெண்கள் மௌனமாக இருந்தாலே கல்யாணத்திற்கு சம்மதம்; குழந்தைத் திருமணத்திற்கும் அனுமதி- தாலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து ஆப்கானில் தாலிபான் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது தாலிபான் அரசு எப்போதும் பெண்களுக்கு எதிரான ஆட்சியாக இருக்காது என அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஆப்கானிலில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே அமைகிறது. குறிப்பாக பொது வெளியில் தனியாக நடந்து செல்லக்கூடாது. ஆண்களுடன் பணிபுரியும் போது எப்படி இருக்க வேண்டும்? ஆடை கட்டுப்பாடு என பல சிக்கல்கள் நிறைந்த அறிவிப்பைத் தாலிபான் அரசு கொண்டு வந்தது. இதனால் பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், principle of seperation between spouses என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அதிகாரப்பூர்வ அரசியலில் புதிய சட்டம் வெளியிடப்பட்டது. கன்னிப்பெண்கள் திருமணம் உட்பட 31 விதிகள் கொண்ட இந்த புதிய குடும்ப சட்டத்திற்குத் தாலிபான்களின் தலைவர் ஹிபத்துலா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய சட்டம் சொல்வது என்ன?

திருமணம் செய்யவிருக்கும் ஒரு கன்னிப்பெண்ணிடம், மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொள்ள உங்களுக்கு சம்மதா எனக்கேட்கும் போது, அவர்கள் அமைதியாக இருந்தால், அதை சம்மதமாகவே நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது சிறுவர்கள் மற்றும் ஏற்கனவே திருமணமான பெண்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கான சம்மதத்தை வாய்மொழியாகத் தெளிப்படுத்த வேண்டும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமின்றி சிறார் திருமணம் மற்றும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் ஏற்படும் குழந்தை திருமணங்களுக்குத் தாலிபான் அரசான தற்போது சட்டப்பூர்வ அனுமதி அளிக்கிறது. இத்திருமணத்திற்கான முழு அதிகாரம் சம்பந்தப்பட்ட குழந்தையின் தந்தை அல்லது தாத்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கியார் அல் புலூக் என்ற சட்டக்கோட்பாட்டையும் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி சிறு வயதில் குழந்தைகளுக்கு நடத்தப்படும் திருமணம் தங்களுக்கு வேண்டாம் குறிப்பிட்ட வயதில் ரத்து செய்துக் கொள்ளலாம். ஆனால் வழக்கமான நீதிமன்றங்களில் இல்லை. தாலிபான் மத நீதிமன்றங்களின் முறையான அனுமதி கட்டாயம் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குழந்தைத் திருமணம் குறித்து தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள சட்டம் நிச்சயம் குழந்தைகள் மற்றும் பெண்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பெண்ணிய ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V