தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பு ஏற்றார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் நடைபெற்ற 17 வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதல் அமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் ஜோசப் விஜய் மே 10 ல் பொறுப்பு ஏற்றார். இவருடன் ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், கீர்த்தனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். யார் யாருக்கு என்னென்ன இலாக்கள்? என்று இதுவரை ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இலாகா இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல்துறை, உள்துறை, மகளிர், இளைஞர் நலன், குழந்தைகள், முதியவர்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்பு திட்ட அமலாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதல்வர் விஜய் தன் வசமே வைத்துக் கொண்டார். தமிழக வெற்றிக்கழகத்தின் மூத்த அமைச்சராக செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்படுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக என். ஆனந்த், தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா, கனிம வளத்துறை அமைச்சராக பிரபு, உணவுத்துறை அமைச்சராக வெங்கடரமணன், பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக ராஜ்மோகன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக அருண்ராஜை நியமனம் செய்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும் மின்சாரம், எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சராக நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 17 வது சட்டப்பேரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்கழத்திற்கு 26 இடங்கள் ஒதுக்கப்படும் எனவும், தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. இன்று ஒரு சில தினங்களில் தமிழக அமைச்சரவையில் உள்ள பிற துறைகளுக்கான அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.