உலக நாடுகளில் மீண்டும் வைரஸ் தொற்று காரணமாக லாக் டவுண் வந்துவிடுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழும் அளவிற்கு அச்சுறுத்தி வருகிறது எபோலா வைரஸ். ஆம் மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே மிக கொடிய வைரஸ்களில் ஒன்றாக எபோலா வைரஸ் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும். ஆனாலும் பெருந்தொற்று அவசர நிலை என்ற தகுதியை எட்டவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இதுவரை எபோலா வைரஸ் தொற்று காரணமாக 88 க்கும் அதிகமான நபர்கள் உயிரிழ்ந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் மருத்துவனையில் சிகிச்சை பெறுவருவதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றாக காங்கோவில் மட்டுமல்ல அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் வைரஸ் தொற்று பரவும் அச்சம் அதிகளவில் ஏற்பட்டுவருகிறது.
எபோலா வைரஸ் எப்போது கண்டறிப்பட்டது?
காங்கோவில் கடந்த 1967 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அடுத்ததாக இந்த பெருந்தொற்றினால் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கோவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் எபோலா வைரஸால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் பரவுவது மக்களிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பும் பெருந்தொற்று குறித்து அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த அவசர நிலை பிரகடனம் என்றாலும் அவசர நிலையை எட்டவில்லை என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இருப்பினும் உலக நாடுகளின் நலன் கருதி சர்வதேச எல்லைகளில் தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் கூறியுள்ளார்.
எபோலா தொற்றின் அறிகுறிகள்:
திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் தசை வலி
தீவிர சோர்வு மற்றும் உடல் பலவீனம், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதோடு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பசியின்மை போன்றவை ஏற்படும். ஒருவேளை பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மூக்கு, கண்கள், ஈறுகள் மற்றும் பிறப்புறுகளில் இரத்தம், மூளையின் ஏற்படக்கூடிய பாதிப்பால் மனக்குழப்பம், ஆக்ரோஷமாக நடந்துக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.