அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நீட் மறுதேர்வு ஜூன் 21; அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் படி ஒவ்வொரு ஆண்டும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைக்குப் பின்னதாக நீட் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்கள் என மொத்தம் 5432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.

கட்டுப்பாடுகளுடன் தேர்வு:

ஒவ்வொரு ஆண்டும் எப்படி நீட் தேர்வுகள் பலத்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுமோ? அதே போன்று தான் இந்த ஆண்டும் நடைபெற்றது. ஆனாலும் எப்படியோ? நீட் தேர்விற்கான வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கான மறு தேர்வு மத்திய அரசின் ஒப்புதலோடு ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என முடிவு செய்தோம் என்று கூறினார். வரும் கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் ஓ.எம்.ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூன் 21ல் நடைபெறும் நீட் மறுதேர்விற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்வானது மாலை 5.15 மணி வரை தொடரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான ஹால் டிக்கெட்டை ஜூன் 14 ஆம் தேதிக்குள் அனைத்துத் தேர்வர்களுக்கும் வழங்கப்படும்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V