அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

‘சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’ – திருமாவளவன் முடிவு! திடீரென பின்வாங்கியது ஏன்?

10 ஆண்டுகளுக்குப்பின் சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திடிரென தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் திடீரென பின்வாங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் தேர்தல் பிரச்சாரம் என தமிழக அரசியல் களம் சூடாகவே இருக்கிறது. களத்தில் அவ்வப்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் முடிவுகள் பெரும் பேசுபொருளாகி வருகிறது. அந்த வகையில் வி.சி.கவின் தலைவர் திருமாவளவனின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு அரசியலில் ஆட்சிக்கட்டிலில் யார் அமர வேண்டுமென முடிவெடுக்கும் முக்கிய கட்சியாக வளர்ந்து நிற்கிறது. 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகித்த வி.சி.க ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த 5 ஆண்டுகளாகவே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, Double Digit சீட் வேண்டுமென்ற கோரிக்கைகளை திருமாவளவன் பல நேரங்களில் முன்வைத்து வந்தார்.

10 ஆண்டுகளுக்குப்பின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி!

இப்படியான நிலையில், நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தி.மு.க தலைமை கடந்த தேர்தலைவிட வெறும் இரண்டு தொகுதிகள் கூடுதலாக வி.சி.க., விற்கு ஒதுக்கியது. ஒட்டுமொத்தமாக, 8 தொகுதிகளில் களம் காணும் வி.சி.க.,வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

இதில், ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற அரசியலுக்குள் வராமல், மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே களம் கண்டு வந்த தற்போதைய சிதம்பரம் தொகுதியின் எம்.பியான திருமாவளவன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக பல வளர்ச்சிப் பணிகள் செய்து, அரசியல் களத்தை அதிரச்செய்யும் பேச்சாற்றல் கொண்ட சிட்டிங் எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ், குற்றச்சாட்டுகளுக்குள் சிக்காமல் மக்கள் பணி செய்து வந்த சிட்டிங் எம்.எல்.ஏ.,வான பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், கட்சியின் பல கட்ட நிர்வாகிகளுக்குள் அதிருப்தி அலை வீசியதுடன், கட்சிக்குள் உட்கட்சி பூசல் உருவாகும் நிலையும் இருந்தது.

ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்க சீட் எனக்கூறி வந்த திருமாளவன் நேரடியாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு வேளை தொங்கு சட்டசபை சூழல் உருவானால், திருமாளவன் எப்படியான Stand எடுப்பார், என்ன டிமாண்ட் செய்வார், அது தி.மு.கவிற்கு எப்படியான முடிவைத்தரும் என்பது போன்ற பல கேள்விகள் அரசியல் களத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

இப்படியான சூழலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவில்லை என அறிவித்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

‘துணை முதல்வர் பதவிக்கு ஆசையில்லை – தேர்தலில் போட்டியிடவில்லை’

இது தொடர்பாக இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னதும், உடனே என்னென்னவோ வதந்திகள் கிளம்பின. திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதைக் கேட்கிறார். அப்படியிருப்பவர், இந்த முறை தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் தான் அமையும் என்பதை கணித்திருக்கிறார் எனவும், எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, துணை முதலமைச்சர் பதவியை வாங்க ஆசைப்படுகிறார் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன.

எனக்கு அப்படியான எந்த ஆசையும் இல்லை. இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை நான் வலியுறுத்தவில்லை. காரணம், இந்த டிமாண்ட் கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்திவிடக்கூடாது என நினைத்திருந்தேன். இதனால், இந்த தேர்தலில் நான் இந்த கோரிக்கையை முன் வைக்கவில்லை. அப்படி இருக்கும் எனக்கு, எப்படி துணை முதல்வர் பதவி குறித்த ஆசை வந்திருக்கும்? பதவி மீது ஆசை இருந்தால், நான் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக இருந்தபோது எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?

என்னுடைய நகர்வை கொச்சைப்படுத்திய காரணத்தினால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் போட்டியிட இருந்த காட்டுமன்னார் கோவில் தொகுதியில், மறைந்த இளையபெருமாள் ஐயாவின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என, விளக்கம் அளித்துள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாக திருமாவளவன் தேர்தலில் போட்டியில் இருந்து விளகியுள்ளாரா? அல்லது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப்பூசலை சரி செய்யும் நோக்கில் விட்டுக்கொடுத்துள்ளாரா? அவரின் வியூகம் என்ன? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk