அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

மாரிதாஸ் வெளியிட்ட சர்ச்சை ஆடியோ – வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய எம்.பி ஆ.ராசா! நடந்தது என்ன?

தி.மு.க எம்.பி ஆ.ராசா பேசுவது போன்ற சர்ச்சை ஆடியோக்களை ‘யூடியூபர்’ மாரிதாஸ் வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஆ.ராசா. ஆனால், தான் வெளியிட்டிருப்பது உண்மையான ஆடியோ என்கிறார் மாரிதாஸ்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘யூடியூபர்’ மாரிதாஸ் அடிக்கடி ‘X’ பக்கத்திலும், ‘யூடியூபிலும்’ அரசியல் தலைவர்கள் சார்ந்த ஆடியோ பதிவுகள், வீடியோக்கள் வெளியிடுவதும், அது அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்புவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாரிதாஸ் தனது ‘X’ பக்கத்தில் ஆ.ராசா பேசுவது போன்ற இரண்டு ஆடியோக்களை வெளியிட்டிருந்தார். அதில், 2G ஊழல் விவகாரம் தொடர்பாக ஆ.ராசா பேசும் வகையிலும், கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் தகுதி குறித்து ஆ.ராசா விமர்சிப்பது போன்ற உரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் எனப்பேசுவது போன்ற உரையாடல்கள் இருந்தன.

இந்த ஆடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ் அந்தப்பதிவில், ’’இதுவரை வெளியாகாத முக்கிய ஆடியோ இதோ மக்களுக்காக… உடனடியாக தி.மு.க ஆ.ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர்,’’ எனக்குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

மேலும், ‘‘இது AI ஆடியோ அல்ல, என் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்துகொள்ளுங்கள்’’ என தி.மு.கவினரை கடுமையாகச் சாடியிருந்தார்.

மாரிதாஸின் பதிவிற்கு தி.மு.கவினர் கடும் கண்டனர் தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

மாரிதாஸூக்கு ஆ.ராசா வக்கீல் நோட்டீஸ்!

இந்நிலையில், இன்று காலை ஆ.ராசா தனது  ‘X’ பக்கத்தில் மாரிதாஸூக்கு எதிரான வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘யூ–டியூபர் மாரிதாஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நோட்டீஸில், ‘‘மாரிதாஸ் வெளியிட்ட ஆடியோக்கள் பல சமயங்களில் எடுக்கப்பட்ட ஆடியோக்களை திரித்து ஒன்று சேர்த்து வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யான ஆடியோ உருவாக்கப்பட்டு, அவதூறு பரப்புவதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நோட்டீஸ் பெற்றவுடன் ஆடியோ பதிவுகளை மாரிதாஸ் நீக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த ஆடியோ எங்கிருந்து பெறப்பட்டது, எவ்வாறு திருத்தப்பட்டது என்ற தகவல்களை வெளியிட வேண்டும்,’’ என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இவற்றை தவறும் பட்சத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

‘அந்த ஆடியா உண்மையானது’

இருப்பினும் ‘யூடியூபர்’ மாரிதாஸ் தனது ‘X’ பக்கத்தில், ‘‘திமுக ஆ ராசா அவர்களுக்கு Sorry மன்னிப்புக்கு கேட்க முடியாது…’’ என கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான மற்ற சில பதிவுகளில், ‘‘அந்த ஆடியோ உண்மையானது, பொதுநலனுக்காக வெளியிடப்பட்டது. ஆடியோவில் எந்தப்பகுதி பொய்யானது, புனையப்பட்டது என நீங்கள் குறிப்பிடப்படவில்லை. உங்கள் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தெளிவற்றவை,’’ எனக்கூறியுள்ளார். தி.மு.க ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க ஐ.டி.விங் மாரிதாஸூக்கு எதிராக சமூக வலைளத்தில் கடுமையாக கருத்துக்கள் தெரிவித்து, அவரை விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினர் ஆ.ராசாவின் இந்த ஆடியோக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk