சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் எனவும் வாகனப்படியாக ரூபாய் 75 ஆயிரம் மற்றும் நியமிக்கப்படும் உதவியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவிருந்தார்.. இதையடுடுத்து கார் பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பெறலாம் என்ற புதிய விளக்கத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசுகையில், நிதி நிலை பற்றாக்குறை உள்ள நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேருக்கு கார் வேண்டாம் என்றும், பிரமாண பத்திரங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அமைச்சர்களுக்கு, கார், பங்களா, உதவியாளர்கள் வழங்கப்படுவது என்பது, தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கத் தான் என தெரிவித்தார். அமைச்சர்களுக்கு உள்ள புரோட்டகால் மாதிரி உறுப்பினர்களுக்கும் கார் பெறுவது என்பது உரிமை எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியுள்ளார். விசிக இடதுசாரி உறுப்பினர்களுக்கு எல்லாம் கார் இல்லை என்று கூறினார். எங்களுக்கு எல்லாம் கார் இருக்கிறது. நாங்கள் எல்லாம் கார் கேட்டு விண்ணப்பிக்கவே மாட்டோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பெறலாம் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி ராமசந்திரன், எங்களுக்கு கார் வேண்டாம் என்றார். அதிமுக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. உறுப்பினர்களுக்கு கார் அவசியம் என்று பாமக உறுப்பினர் கணேஷ்குமார் தெரிவித்தார்.